Saturday, April 13, 2013

நீளம் , அகலம் பலன்களின் தொடர்ச்சி


31' அடி 
யோகம் கிடைக்கும் நல்லவர்களே நண்பர் ஆவார்கள் .உயர்வான நிலை அடையலாம் , மிகுந்த புகழ் கிடைக்கும்  .

32' அடி 
எவரையும் வசப்படுத்தும் ஆற்றல் உண்டாகும் .பொது நல  சேவையில் புகழ் கிடைக்கும் . இதுவரை இழந்தவைகளை இனிமேல் பெறலாம் .

33'அடி 
எல்லோரிடமும் அன்பு பிறக்கும் ,வருவாய் அதிகரிக்கும் செல்வம் செல்வாக்கு பெருகும் .

34' அடி 
தீய பலன்களே நடக்கும் மேலான காரியங்களில் ஈடுபட நேரிடும் .அதனால் பிரச்னை ஆகி அவமானம் அடைய நேரிடும் ஊரைவிட்டு ஓட நேரிடும் . மூதாதையர் சேர்த்துவைத்த பெயரும் செல்வமும் இழக்க நேரிடும் .

35'அடி 
செல்வ செழிப்பு உண்டாகும் .தொழில் மேன்மை உண்டாகும் .எல்லோரிடமும் பாராட்டு  கிடைக்கும் கிடைக்கும் வகையில் உங்கள் செயல்திறன் மேம்படும் .

36'அடி 
உயர்வான பதவி கிடைக்கும் .வீர தீர செயல்கள் செய்ய நேரிடும் .அளவற்ற புகழ் கிடைக்கும் .

37'அடி 
எந்த காரியம் ஆனாலும் வெற்றி கிடைக்கும் .கால்நடை விருத்தியாகும் .பண்ணை தொழில் மேன்மைபெறும் .

38'அடி 
இடையறாத இன்னல்கள் ஏற்ப்படும் .ஏழ்மை நிலைகொள்ளும் எந்த காரியமும் செய்ய இயலாது .எதிலும் தடங்கல் இழுபறி நிலைதான் நீடிக்கும் .

39'அடி 
அமைதியான வாழ்வு அமையும் பொருள் நிலைக்கும் .பொது இடத்தில மரியாதை கிடைக்கும் .நல்ல புத்திரர்கள் கிடைப்பர் .

40'அடி 
எதிர்ப்பு மிகும் . இடைஞ்சல்கள் இருக்கும் .எடுத்த காரியங்கள் யாவும் நிறைவேறாமல் போகும் .எல்லவேளைகளும் பாதியிலேயே  நிற்கும் .

No comments: