Wednesday, October 24, 2012

இன்று யாரிடம் நாம் வாஸ்து பற்றி பேசினாலும் அவர்களின் உடனடி பதில் "எனக்கும் வாஸ்து பற்றி தெரியும் ,என்ன வாஸ்து க்கு  நாலு மூளையும் சரியா இருக்கணும் ஈசானி ,அக்னி ,வாயு ,குபேரன் இது சரியா இருந்தா போதும் என்ன நான் சொல்லுறது " இதுதான் இன்று எல்லோரின் முந்திரி கொட்டை  பதில் . காரணம் 'நான் சகல கலா வல்லவன் 'என தன்னை வெளிப்படுதிக்கொள்வதில் நம் எல்லோருக்கும் ஆசைதான் ஆனால் எல்லாவற்றிலும் 'அஷ்ட்ட அவதானி 'என்பது யாராவது ஒருவர் மட்டுமே என்பது தான் சாத்தியம் .
" பல மரம் நோக்குபவன்
  ஒரு மரமும் வெட்டான் "
என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
வாஸ்து பற்றி யார் கூறுவதை நம்புவது ? எது உண்மை?அதை எவ்வாறு பின் பற்றுவது ? இவை அனைத்திற்கும் அறிவியல் , உலக நடைமுறை , நம் முன்னோர்கள் எழுதிய சாஸ்திர ஆதாரம் போன்றவற்றோடு நம் எல்லோரின் அனுபவத்தையும் கலந்து  வாஸ்துவை ஒரு தெளிவான பார்வையில் விவாதிப்போம்.


வாஸ்து என்றால் என்ன ?
நம் முன்னோர்கள் சொல்லிவைத்த வார்த்தைகள் ஆனதும் எந்த சூழ்நிலையிலும் அந்த சொல் அந்த சூழ்நிலைக்கு ஏற்ற அர்த்தத்தை தருவதாக அமையும் உதாரணம் திருக்குறள்.
வாஸ்து என்ற சொல் ஒரு சம்ஸ்கிருத சொல் ஏற்கனவே நடந்த விசயத்தையோ அல்லது ஐதீகத்தையோ நாம் பேசிக்கொள்ளும் போது அதை ஆதாரமாக கூற துணை சேர்த்துக்கொள்ளும் சொல் "நீங்க சொல்லுறது வாஸ்தவம் தான் "இந்த வாஸ்தவம் என்பது உண்மை எனும் மெய்யியல் இன் மறை பொருள் விளக்கம்
இந்த வாஸ்து என்ற சொல் பற்றி சிலரின் கருத்து நாம் வசிக்கும் இடம் இதை சம்ஸ்கிருத  மொழியில் வாசஸ்தலம் என்றும் கூறுவார் உதாரணமாக காடுகளில் சித்தர்கள் வசிக்கும் இடத்தை சித்தர்கள் வாசஸ்தலம் என்றும் கூறுவார் . மான்கள் வசிக்கும் இடத்தை மான்கள் வாச ஸ்தலம் என்றும் கூறுவதை  பார்த்து இருக்கலாம் எனவே வசிப்பதற்கு ஏற்ற இடத்தை பற்றி நுட்பமாக தெரிந்து கொள்வதற்கு உள்ள இக்கலையை வாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்பட்டது .
வார்த்தையின் உண்மையான உணர்ச்சி என்ன என்பதை மறந்து விட்டு வேறு வார்த்தைகளை மட்டும் பிடிவாதமாக தொங்கி கொண்டு இருப்பதால் எந்த பயனும் வராது எனவே 'வாஸ்து ' எனும் சொல்லின் ஆராய்ச்சியை விட்டு அதனால் விளையும் நன்மை தீமை பற்றியும் அதை எவ்வாறு நிதர்சனமான அணுகுமுறையோடு பின்பற்றுவது என்பதை அறிவியல் பார்வையோடு விளக்குகிறேன்

வாஸ்துவின் அடிப்படை விதிகள்

வாஸ்துவின் அடிப்படை விதிகளில் மிகவும் முக்கியமானது திசைகள்.
வாஸ்து திசைகளை அடிப்படையாக கொண்டுதான் இயங்குகிறதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.பிறகு எதற்குதான் திசைகள் என்றால் நாம் வாஸ்துவை புரிந்து கொள்ளவும் அதன் படி தெளிவாக பயன்படுத்திக்கொள்ள  திசைகள் பயன் படுகின்றன.

திசைகள்

திசை என்பது பகுதி என்பதாகும் பூமியின் மையத்தில் இருந்து மேல் பகுதி வடக்கு என்றும் கீழ் பகுதி தெற்கு என்றும் அழைக்கபடுகிறது நமது கணக்கீட்டு தேவைக்கு சூரிய வெளிச்சம் முதலில் எந்த பகுதியில் இருந்து தென்படுகிறதோ அந்த பகுதி கிழக்கு என்றும், மறையும் பகுதி மேற்கு எனவும் அழைக்கப்படுகிறது . அதனால் திசைகளை மட்டுமே அடிப்படையாக  கொண்டு கட்டிட  அமைப்புகளை அமைக்கக்கூடாது

No comments: